“புகையிரத ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால்” ; போக்குவரத்து அமைச்சு அதிரடி

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, 12 ரயில் தொழிற்சங்கள், கடந்த 3 தினங்களாக முன்னெடுத்துவரும் ரயில் சேவைப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம், தொடர்ந்து இடம்பெறும் என்று, தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் புகையிரத ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் பணியில் இருந்து நீங்கியதாக கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளருடன் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து, வர்த்தமானியில் ரயில் சேவைப் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கபட்டும்…

குருநாகல் வீதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

குருநாகல் – தம்புள்ளை வீதியில் தலகிரியாகம பகுதியில், பிரதான பாதைக்கு அருகில் கடும் காயங்களுடன் நபரொருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இவர் 25 – 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்பதோடு, அவரது தலை, முகம் மற்றும் பாதங்களில் பாரிய காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, இவர் விபத்துக்குள்ளானாரா அல்லது ஏதேனும் குற்றச் செயலா என்ற…

இலங்கைக்கு 410 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், நான்காவது நாளான இன்று, 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், 246 ஓட்டங்களைப் பெற்ற இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி டெல்லியில் ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பில், அதிரடியாக ஆடிய தலைவர் விராட் கோலி 243 ஓட்டங்களையும், முரளி விஜய் 155 ஓட்டங்களையும் விளாசினர்….

பாடசாலைகளுக்கு விடுமுறை

அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடனான தனியார் பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 8ம் திகதி மூடப்படவுள்ளது. மேலும் அனைத்துப் பாடசாலைகளும் ஜனவரி 2ம் திகதி மீளத் திறக்கப்படும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த ஆசிரியர்

பாடசாலை மாணவியுடன்  வாய் வழியாக உறவுகொண்ட தலைமையாசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் கொடரமாவிலுள்ள தில்லைய என்ற பொது பாடசாலையில் 65 வயதுடைய பிரான்சிஸ் எக்சேவியர் என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். குறித்த பாடசாலையில் கல்வி கற்கும்  7 ஆம் வகுப்பு மாணவியை வலுக்கட்டாயமாக கழிப்பறை இடத்திற்கு அழைத்து சென்று,பிறகு அந்த மாணவியை கட்டாயபடுத்தி வாய் வழியாக உறவு கொள்ள வைத்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி இந்த கொடூர சம்பவத்தை…

முதலிரவு அறையில் கணவன் செய்த வேலை ; மனைவி வைத்தியசாலையில்

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே முதலிரவு அன்று கட்டிய மனைவியை பிளேடால் அறுத்த கொடூர கணவனை கைது செய்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். சித்தூரை சேர்ந்த ஆசிரியர் ராஜேஷூக்கும், அதே பகுதியை சேர்ந்த வைத்தியர் சைலஜாவுக்கும் சமீபத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. திருமண தினத்தன்று பல்வேறு கனவுகளுடன் முதலிரவு அறைக்குள் சென்ற சைலஜா சிறிது நேரத்தில் அலறியடித்து கொண்டு வெளியே வந்தார். இதனால் பெண் வீட்டார் குழப்பம்…

வீதிகளில் உள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கைகளில் பிரதி அமைச்சர்

ஒகி சூறாவளி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 77481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனர்த்தம் காரணமாக களுத்துறையில் 33977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வீதிகளில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளது. எனினும் இரவு பகல் பாராமல் வீதிகளில் உள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கைகளில் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்னர்…

பொது மக்களுக்கு எச்சரிக்கை

தற்போது தெற்கு அந்தமான் தீவுகளை அண்டிய பகுதியில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ள நிலையில், எதிர்வரும் சில தினங்களில் வங்காள விரிகுடாவின் ஊடாக இந்திய நிலப்பரப்பிற்கு இதன் தாக்கம் ஏற்படக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 5 அல்லது 6 ஆம் திகதிகளில் இதன் தாக்கம் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு ஏற்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எனினும் காற்று மண்டலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் காரணமாக இலங்கை மீதான…

சீ இவ்வளவு கேவலமானவரா அமலாபால்

சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் அமலா பால், பிரசன்னா, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அமலாபால் இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். படத்தில் என் தொப்புள் தெரிவது இவ்வளவு பெரிய விஷியமாக பேசப்படும் என நான் நினைக்கவில்லை. நாம் 2017 ஆம் ஆண்டில் வாழ்கிறோம். இருப்பினும் என் தொப்புள் தெரிவது பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது என பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இந்நிலையில்,…