நயன்தாராவுக்கு விரைவில் திருமணமா?

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தியை அவரது காதலர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் என்ற செய்தி பல மாதங்களாக பரவி வருகின்றது. இருப்பினும் இவர்கள் இருவரும் இதற்கு எந்த மறுப்பும் தெரிவித்ததில்லை. அதோடு பொதுநிகழ்ச்சிகளின் போது இருவரும் ஒன்றாக சேர்ந்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு ஊடகத்தில் பேட்டி கொடுக்கும் போது விக்னேஷ் சிவன் அவர்களின் திருமணம் குறித்து ஜாடமாடையாக தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத்திடம் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் பல கேள்விகளை கேட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *