2008 – 2016 ஆம் ஆண்டு வரை மத்திய வங்கியில் பணம் திருடப்பட்டுள்ளது…!

அரசியல் கட்சி பேதமின்றி 2008 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியில் பணம் திருடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மெதிரிகிரிய – யுதகனாவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலப்பகுதியில் கோடிக்கணக்கான பணம் திருடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாகவே நாடாளுமன்றில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்கின்றனர்.

ஊழல், மோசடி, திருட்டு சம்பங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

S.L. Dharshini

http://www.tamilenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *