புறக்கோட்டை காவல் நிலையத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கொழும்பு – புறக்கோட்டை காவல்நிலைய சிறைக்கூடத்தில், இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இன்று அதிகாலை குறித்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இளைஞன் புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பகுதியில் வைத்து காவல்துறையினரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில், உயிரிழந்த இளைஞனின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

S.L. Dharshini

http://www.tamilenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *