தகுதி அற்ற சுமார் பலர் இம் முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர் : சாடு­கிறார் விஜித ஹேரத்

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக போட்டியிட தகுதி அற்ற சுமார் 80 பேர் இந்த முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரியவந்ததாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக குறிப்பிட்டார்.

அதில் இந்த முறை இடம்பெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுமார் 80 பேர் வரையில் பல்வேறுகுற்றச் செயல்களுடன் தொடர்டையவர்கள் என்றும அவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதி அற்றவர்கள் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
S.L. Dharshini

http://www.tamilenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *