இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் ஏஞ்சலோ மெத்யூஸ்

இலங்கை அணி, தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது என அனைத்து போட்டிகளிலும் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றது.

இதன் காரணமாக அணியின் தலைமை பதவியும் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வந்தது. ஆனால், எந்த உத்திக்கும் பழைய பெறுபேறுகள் மட்டும்தான் கிடைக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை அணி, ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அணியின் தலைவராக இருந்த மெத்யூஸ் பதவி விலகினார்.

அதன் பின்னர், உபுல் தரங்கா அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது, பெரேரா தலைவராக செயல்பட்டு வருகின்றார். ஆனால் இலங்கை அணி தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகின்றது.

இந்நிலையில், அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள சந்திரிகா ஹதுருசிங்கா அணிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமித்து 2019 உலக கிண்ண போட்டி வரையில் அவரை தலைமை பதவியில் தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தலைவராக அஞ்சலோ மெத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *