காதலியை கொலை செய்து, பாலியல் உறவு கொண்டதன் பின்னர் மூளையை சமைத்து ருசித்த கொடூரன்

ரஷ்யாவில் இளைஞன் ஒருவன் தனது 45 வயது காதலியை அடித்துக் கொன்று மூளையை சமைத்து சாப்பிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது, அப்பகுதி மக்களிடம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன், விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்த கருத்துகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21 வயதான டிமிட்ரி லுச்சின் என்பவர், தமது 45 வயது காதலியான, ஒல்கா என்பவரை, அவரது குடியிருப்பில் வைத்து, வெற்று மது போத்தலை பயன்படுத்தி கொலை செய்துள்ளார்.

சம்பவத்தன்று இருவரும் மாலை வேளையில் சந்தித்துள்ளதோடு, இருவருமே, மது அருந்தியபடி பல சம்பவங்கள் குறித்து விவாதித்தபடி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் தமக்கு தூக்கம் வருவதாக கூறி படுக்கை அறைக்கு ஒல்கா சென்றுள்ளார். ஒரு மணி நேரம் கடந்த நிலையில், லுச்சின் அவரது படுக்கை அறைக்கு சென்று தலையணையால் ஒல்காவை கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதில் இருந்து தப்பிய அவர், லுச்சினை கடுமையாக கடிந்து கொண்டுள்ளார். ஆனால் சிறிது நேரத்திற்கு பின்னர், வெற்று மதுப் போத்தலைப் பயன்படுத்தி ஒல்காவை கடுமையாகத் தாக்கி கொலை கொலை செய்துள்ளார் லுச்சின்.

இதன் பின்னர், ஒல்காவின் மூளையை சமைத்து சாப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அந்தப் பெண்ணுடன், லுச்சின் பாலியல் உறவும் கொண்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தை அடுத்து, 6 மணி நேரத்திற்கு பின்னர் ஒல்காவின் டேபெட் கணணி மற்றும் 150 ரூபில்ஸ் பணம் உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு மாயமாகியுள்ளார்.

இந்தநிலையில், தகவல் பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட லுச்சின், அதுவரை நடந்தவற்றை பொலிஸாரிடம் ஒப்புவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் லுச்சின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

 

S.L. Dharshini

http://www.tamilenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *