போதையில் பாதை மாறிய கணவன் : குடும்பமே தீயில் கருகிய ‍சோகம்..!

சென்னையில் மனைவியை தீவைத்து எரித்துக் கொன்ற போது, தீக்காயமடைந்த கணவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேடவாக்கம் ராம்தாஸ் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும், சந்தியா என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், ராஜேஷ் மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்குச் செல்லாமல் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க் கிழமை இரவும் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் அதிகாலையில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த தன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளார். இதன் போது  மனைவி  சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராஜேஷ்க்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த பொலிஸார் படுகாயமடைந்த ராஜேஷை மீட்டு கீழ்பாக்கம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

S.L. Dharshini

http://www.tamilenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *