வயிற்று வலி என வைத்தியசாலைக்கு சென்ற சிறுமி கர்ப்பம் : காரணமான ஆசிரியர் கைது

வவுனியா ஓமந்தை பகுதியிலுள்ள 16 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஓமந்தை அலகல்லுபோட்டகுளம் பகுதியிலுள்ள 16வயதுடைய சிறுமியின் வீட்டிற்குச் சென்று நல்லுறவுடன் பழகிய நபர் ஒருவரே இவ்வாறு குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாணவி வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை குறித்த மாணவி கர்ப்பம் என அறியவந்துள்ளதை அடுத்து கடந்த மாதம் 29ம் திகதி அன்று ஓமந்தை பொலிஸாரிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தும் நேற்றைய தினம் குறித்த மாணவியின் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதையடுத்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவித்து சந்தேகத்தில் நொச்சிக்குளம் பாடசாலையின் ஆசிரியரான குமாரசிங்கம் இந்திரசிங்கம் (வயது-50) என்பவர் இன்று காலை கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு குறித்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


	
S.L. Dharshini

http://www.tamilenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *