என்னம்மா நீ இப்படி பண்ணிட்டியேமா : அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல தொகுப்பாளியான மணிமேகலை மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர், இவர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார், இவரது வீட்டில் திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது.

இதனைப்பற்றி அவரும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார், மேலும் மதம் தான் இவர்களது திருமணத்திற்கு தடையாக இருக்கும் எனவும் கூறப்பட்டு வந்தது.

மேலும் இவர் சமீப காலமாக பெற்றோர்களால் கொடுமைபடுத்த படுவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன, ஆனால் இதனை மணிமேகலை மறுத்திருந்தார்.

இதனையடுத்து நேற்று அவரும் அவருடைய காதலர் ஹுசைனும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர், இதனை மணிமேகலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வாழ்த்துக்கள் மணிமேகலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *