15 சிறுமியுடன் உறவுக்கு ஆசைப்பட்டு பொலிஸ் அதிகாரியிடம் சிக்கிய நபர்

சிறுமியுடன் பாலியல் உறவு வைக்க அமெரிக்கா சென்ற கனடா வாழ் இந்தியருக்கு 46 மாத சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கனடா நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தில்பாக் சிங் (வயது 57) என்பவர் கடந்த ஜனவரியில் ஆன்லைன் மூலமாக அரிசோனாவில் தனிநபர் ஒருவரை தொடர்பு கொண்டுள்ளார்.

தான் பேசிக்கொண்டிருக்கும் நபர் 15 வயது சிறுமி என நம்பி அவருடன் செக்ஸ் வைத்து கொள்வது பற்றிய விருப்பத்தினை தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார்.

அதன்பின்பு கடந்த மே மாதம் தில்பாக் சிங் சிறுமியுடன் செக்ஸ் வைத்து கொள்வதற்காக கனடாவில் இருந்து அரிசோனாவின் பிளாக்ஸ்டாஃப் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு போய் பார்த்த பிறகு தான் தெரிகிறது தான் இவ்வளவு நாட்களாக பேசியிருப்பது 15 வயது சிறுமியோடு அல்ல ஒரு போலிஸ் அதிகாரியிடம் என்று .

வசமாக மாட்டிக் கொண்ட தில்பாக் சிங்கிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து அவருக்கு 46 மாத சிறை தண்டனை வழங்கி அரிசோனா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

S.L. Dharshini

http://www.tamilenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *