காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி!

இந்தியா – காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி அடுத்த வாரம் பொறுப்பேற்க உள்ளார். மொகலாயர் கால வாரிசு அரசியல் நீடிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரசின் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது துணைத் தலைவராக உள்ள ராகுல்காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், ராகுல் ஒருமனதாக கட்சித் தலைவராவது உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவராக அவர் அடுத்த வாரம் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மூத்த தலைவர்களான பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் ஆகியோரை அவர்களது இல்லங்களில் சந்தித்து ராகுல் காந்தி ஆசி பெற்றார். ராகுல் காந்தியின் தலைமையை எதிர்பார்த்து காங்கிரசின் சக தலைவர்களோடு, தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர். அமேதி தொகுதியில் பட்டாசுகள் வெடித்தும், ஆடிப்பாடியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ள ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர். இதனிடையே, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ஷாஜகானுக்குப் பிறகு அவரது மகன் ஔரங்கசீப் மன்னரானதாக சுட்டிக்காட்டினார். அதேபோல, ராகுலும் காங்கிரஸ் தலைவராவதாக ஒப்பிட்ட மோடி, ஜனநாயகத்தை பின்பற்றவில்லை என சாடினார்.

S.L. Dharshini

http://www.tamilenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *