பெப்ரெவரி 17ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

வரும் பெப்ரெவரி 17ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.”எதிர்வரும் பெப்ரெவரி 4ஆம் திகதிக்குப் பின்னரும் 17ஆம் திகதிக்கும் முன்னரும் ஒரு நாளில் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். ஒரே நாளில் தேர்தல் நடத்துவதால் 30 கோடி ரூபா செலவாகும்.

பொது விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தேர்தலை நடத்த முடியாது.
சனிக்கிழமை தேர்தலை நடத்துமாறும் வாரநாள் ஒன்றில் வேண்டாம் எனவும் அரசியல் கட்சிகளும் வர்த்தக சமூகத்தினரும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். வாரநாள்களில் தேர்தலை நடத்துவது வர்த்தகத்தைப் பாதிக்கும் என்பதை நாம் கவனத்தில் எடுப்போம்.

எனவே, சரியான திகதியைத் தீர்மானித்து பொதுமக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும்.வாக்களிப்பு நேரம் மாலை 4 மணிக்கு நிறைவடைந்ததும் முதன்முறையாக மாலை 5 மணிக்கே வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்” என்று தேர்தல்கள் ஆணை்க்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *