இந்திய அணி வலுவான நிலையில் ; களத்தில் கலக்கும் முரளி – விராட் ஜோடி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இன்று டெல்லியில் ஆரம்பித்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதற்கமைய தொடக்க ஆட்டக்காரர் தவான் மற்றும் புஜாரா ஆகியோர் தலா 23 ஓட்டங்களில் விக்கெட்டுக்களை இழந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தமிழக வீரர் முரளி விஜய் சதமடித்து அசத்தினார். அவருடன் விளையாடி விராட் கோலியும் 113 பந்துகளில் சதமடித்தார். கோலி மற்றும் முரளி விஜய் கடந்த டெஸ்ட் போட்டியிலும் சதமடித்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் வரை இந்திய அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 307 ஓட்டங்களை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *