பேஸ்புக் உரிமையாளரின் சகோதரிக்கு பாலியல் தொல்லை ; விமானத்தில் நடந்தது என்ன தெரியுமா?

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சகோதரிக்கு அமெரிக்க விமானத்தில் பயணி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு விமானத்தில் நடந்த மோசமான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் மார்கின் சகோதரி ரண்டி ஜூக்கர்பெர்க் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து மெக்சிகோவின் மசட்லான் நகருக்கு அலாஸ்கா விமானத்தில் பயணித்தேன்.

அப்போது என் இருக்கைக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்த நபர், என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.

குடிபோதையில் இருந்த அவர் பாலியல் தொடர்பாக ஆபாசமாகவும் பேசியதுடன், விமானத்தில் இருந்த மற்ற பெண் பயணிகளின் அங்க அசைவு குறித்தும் வர்ணித்தார்.

இதுபற்றி விமான பணியாளர்களிடம் முறைப்பாடு செய்ததாகவும் அந்த நபர் வழக்கமான பயணி என்பதால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

ரண்டியின் முறைப்பாட்டின் பேரில் விசாரணையை தொடங்கியிருப்பதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளதுடன் இதுகுறித்து ரண்டியை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *