பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மரணம்?: பகீர் தகவல்! : வெளியானது உண்மை!!!

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் உயிரிழந்துள்ளதாக சமுகவலைத்தளங்களில் ரைலாகிவந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கடந்த சில நாட்களாக பாரிய கலவரம் இடம்பெற்றுவருகின்றது. குறித்த கலவரத்தை அடக்குவதில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர்.

இதன்போது குறித்த பகுதியில் இடம்பெற்ற ஆர்பாட்டமொன்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் உமர் அக்மால் கலந்துக்கொண்டிருந்ததாகவும், இதன்போது இராணுவ வாகனமொன்று மோதியதில் இவர் உயிரிழந்துள்ளதாகவும், பல புகைப்பட ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிடப்பட்டு வந்தன.

இந்நிலையில் உமர் அக்மல் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த செய்தி உண்மையா? இல்லையா? என்பது தொடர்பில் சமுகவலைத்தளங்களில் கேள்விகள் எழத்தொடங்கின.

பின்னர் டுவிட்டரில் வீடியொவொன்றை வெளியிட்டு உமர் அக்மல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வத்துள்ளார். வீடியோவை வெளியிட்டுள்ள அக்மல், தான் உயிருடன் இருப்பதாகவும், தன்னைப்பற்றி வெளிவந்த செய்திகள் அனைத்தும் பொய் எனவும் குறிப்பிட்டுள்ளதுடன், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நெஷனல் இருபதுக்கு-20 கிண்ணத்தின் அரையிறுதிப்போட்டியில் விளையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

S.L. Dharshini

http://www.tamilenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *