அக்கா இறந்த 4 மணி நேரத்தில் தங்கைக்கு திருமணம்

டெல்லி அருகே அக்காவை அவரது கணவரே உயிரோடு கொளுத்தி கொலை செய்த நான்கு மணி நேரத்தில் மரணம் அடைந்த பெண்ணின் தங்கைக்கு திருமணம் நடந்துள்ளது.

டெல்லி அருகேயுள்ள ஆக்ராவில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தனது மூத்த மகள் நீரஜாவை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய் புஷ்பேந்திரா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே புஷ்பேந்திரா தனது மனைவியை வரதட்சணை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நீரஜாவின் தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. புதுமாப்பிள்ளைக்கு மோதிரம் உள்பட நகைகள் அணிவித்ததாக மூத்த மாப்பிள்ளை புஷ்பேந்திராவுக்கு தெரியவரவே ஆத்திரமடைந்த அவர் மனைவி நீரஜாவை உயிருடன் கொளுத்தி கொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் தங்கையின் திருமணத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் நடந்துள்ளது.

அக்கா மரணத்தால் தங்கையின் திருமணம் நடைபெறுமா? என்ற சந்தேகம் அடைந்த நிலையில், மூத்த மகளின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு அடுத்த நான்கு மணி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் சம்மதத்துடன் இளைய மகளுக்கு எளிய முறையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அக்காவின் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் கண்ணீருடன் தங்கை தனது கழுத்தில் தாலியை ஏற்றுக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *