உலோகச்சுரங்கமாக மாறிய வயிறு : 263 நாணயங்கள், 100 ஆணிகள் உட்பட 7 கிலோகிராம் உலோகங்கள் மீட்பு

இந்­தி­யாவைச் சேர்ந்த நபர் ஒரு­வரின் வயிற்­றி­லி­ருந்து 263 நாண­யங்கள், 100 ஆணிகள் மற்றும் பல உலோ­கப்­பொ­ருட்­களை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் மருத்­து­வர்கள் அகற்­றி­யுள்­ளனர்.

மத்­திய பிர­தேச மாநி­லத்தைச் சேர்ந்த 35 வய­தான மக்சுத் கான் எனும் நபரின் வயிற்­றி­லி­ருந்தே இப்­பொ­ருட்கள் அகற்­றப்­பட்­டுள்­ளன. இவர் நாண­யங்கள் மற்றும் உலோ­கங்­களை உட்­கொள்­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­தவர் என மக்சுத் கானின் குடும்­பத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.

மத்­திய பிர­தே­சத்தின் சட்னா நக­ரி­லுள்ள சஞ்சய் காந்தி வைத்­தி­ய­சா­லையில் இச்­சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது.

அப்­போது மக்சுத் கானின் வயிற்­றி­லி­ருந்து 263 நாண­யங்கள், 100 ஆணிகள், பல சவர அல­குகள் (பிளேட்) ஆகி­யன அகற்­றப்­பட்­டன. இவற்றின் மொத்த எடை சுமார் 7 கிலோ­கி­ராம்கள் ஆகும்.

இச்­சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொண்ட மருத்­துவக் குழா­முக்கு தலைமை தாங்­கிய டாக்டர் பிரியங்க் சர்மா இது தொடர்­பாக கூறு­கையில்,
கடு­மை­யான வயிற்று வலி கார­ண­மாக, அவர் வைத்­தி­ய ­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

அவரை நாம் பரி­சோ­தித்­த­போது நாண­யங்கள், ஆணிகள் ஆகி­யன அவரின் வயிற்­றி­லி­ருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்தோம். எனது வாழ்க்­கையில் இவ்­வா­றான ஒரு நோயா­ளியைக் கண்­டமை இதுவே முதல் தடவை” என்றார்.

சார­தி­யாக பணி­யாற்­றிய மக்சுத் கான், தனது வாடிக்­கை­யா­ளர்கள் கொடுக்கும் நாண­யங்­களை விழுங்கி வந்­த­தாக மருத்­து­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.
மன அழுத்­தத்­துக்­குள்­ளான நிலையில் மக்சுத் கான் இவ்வாறு நாணயங்களை விழுங்கியிருக்கலாம் என தாம் எண்ணுவதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

S.L. Dharshini

http://www.tamilenews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *