மனைவியின் வீடியோவை கணவருக்கு அனுப்பிய நபர்கள்

5 வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி எடுத்த வீடியோவை அந்த பெண்ணின் கணவருக்கே அனுப்பி வைத்த இரு நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கோலார் மாவட்டத்தில் ஸ்ரீனிவாசஸ்பூரை சேர்ந்த அரீப் மற்றும் ஜஹிர்கான் இருவர் மொஹல்லா என்ற மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை அவர்கள் வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்த அப்பெண் வீட்டார் காவல்துறையிடம் கூறாமல் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். பல வருடம் கழித்து அப்பெண்ணிற்கும் மெக்கானிக் வேலை பார்க்கும் ஒருவருக்கும் திருமணமாகியுள்ளது.

இதையறிந்த அரீப் மற்றும் ஜஹிர்கான் பெண்ணின் கணவரின் கைப்பேசி எண்ணை தேடி சம்பவத்தை கூறியுள்ளனர். இதை பெண்ணின் கணவர் நம்பாததால் எடுத்து வைத்திருந்த பாலியல் வன்முறை செய்த வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். மேலும் அரீப் மற்றும் ஜஹிர்கான் இருவரும் தன் மனைவியை மிரட்டி வருவதாக காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளார். இதையறிந்த பொலிசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *