5.7 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு

உபேர் வாடிக்கையாளர்கள் 5.7 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு

அமெரிக்காவின் பிரபல கால் டாக்ஸி நிறுவனம் உபேர்.இந்த நிறுவனத்தின் 5.7 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.

திருடப்பட்ட தகவல்கள் குறித்த மேலதிக விவரங்கள் தற்போது வெளியாகிவரும் நிலையில் உபேர் வாடிக்கையாளர்களின் மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் முகவரிகள் உள்ளிட்டவையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

உபேர் வாடிக்கையாளர்கள் தகவல் களஞ்சியம் மீதான இந்த தாக்குதல் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்டது எனவும் அந்த நிறுவனத்தினர் இன்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து முன்னாள் செயல் அதிகாரி ஒருவருக்கு முன்னரே தெரியும் என செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இருப்பினும் குறித்த தாக்குதலில் ஈடுபட்ட குழுக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதில் அமெரிக்க உபேர் ஓட்டுனர்கள் 600,000 பேர் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள 7 லடசம் ஓட்டுனர்களின் தகவல் திருடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உபேர் நிறுவனத்தின் தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டது. அது ஹேக்கர்களின் தாக்குதல் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மேலும், உபேர் வாடிக்கையாளர்கள் தங்கள் பண விவரங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், ஏதேனும் சந்தேகம் எழுந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உபேர் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *